|
|
பகிர்வு 7: நீலாவணன் காவியங்கள்
மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வுமுறை, சடங்குகள், பழக்கவழக்கங்களை நீலாவணன் தன் கவிதைகள் வாயிலாக பதிவு செய்து கொண்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரும் இதுவரை செய்யவில்லை. மட்டக்களப்பு வாழ்க்கை முறை, சடங்குகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய விழையும் சமூகவியலாளர்களுக்கு நீலாவணன் கவிதைகள் நிறையத் தகவல்களை வழங்கக் கூடியவை.
மட்டக்களப்பின் கவிதைப் பாரம்பரியத்தின் ஊற்றுக் கண்களாகத் திகழ்பவை இம்மண்ணின் நாட்டார் பாடல்களே. இங்கு மட்டக்களப்பு பிரதேசம் எனக் கூறப்படுவது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காளவிரிகுடாக் கடலையும் மேற்கே ஊவாமலைக் குன்றுகளையும் எல்லைகளாகக் கொண்டு இலங்கிய நிலப்பரப்பாகும். இந்நிலப்பரப்பில் காலங்காலமாக எழுதா இலக்கியமாகத் திகழ்ந்த நாட்டார் பாடல்கள் (கிராமியக் கவிகள்) மட்டக்களப்பின் பேச்சுமொழியில் இம்மண்ணின் மண்வாசனை கமழும் வகையிலேயே புனையப்பட்டவை. இப்பாடல்களெல்லாம் பெரும்பாலும் தனிப்பாடல்களே. எனினும் செந்நெறி இலக்கியங்கள் என வரும் போது விபுலானந்த அடிகளார் மற்றும் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் கவிதைப் பாரம்பரியத்தின் அடியொற்றி மட்டக்களப்பு மண் ஆனது பல கவிஞர்களை ஈன்றெடுத்துள்ள போதிலும் இவர்களில் எவருமே -கவிஞர் நீலாவணனைத் தவிர- ஈழத்தமிழ் பிரதேசங்களில் தனித்துவம் வாய்ந்ததான மட்டக்களப்பின் பாரம்பரியங்களையும், சடங்குகளையும் அம்மக்களின் வஞ்சகமில்லாத வாழ்க்கை முறைகளையும் வைத்துக் காவியம் ஒன்றினை வடித்துத் தரவில்லை. ஆனால் கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கியமாக்க எத்தனித்தார். அதன் விளைவே அன்னாரின் 'வேளாண்மை'க் காவியம்.
Date: 03/02/2019 (Sunday) Time: 2:00 PM to 4:00 PM
Venue: Senior Citizen Hall, 10 Watson St, Turner ACT 2612
Canberra, Australia.
|
|